24 Tamil News
மாநிலம்

2026 பத்மஸ்ரீ விருதுகள்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு..

N.F.Rifka

admin

2026 பத்மஸ்ரீ விருதுகள்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு..

இந்திய நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டு குடியரசு தின காலகட்டத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகள் மற்றும் பொது சேவைகளில் சாதனை புரிந்த நபர்களை கவுரவிக்கும் நோக்கில் இந்த பத்ம விருதுகளை அரசு வழங்கி வருகிறது.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என்ற 3 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2026ம் ஆண்டு பத்ம விருதுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப ஆண்டுகளாக வெகுஜன மக்களால் பெரிதும் அறியப்படாத சாதனையாளர்களை கவுரவிக்கும் விதத்தில் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2026ம் ஆண்டு பத்மஸ்ரீ (Unsung Padma Awardees) விருது பெறும் 45 பேரின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இந்த வெற்றியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விரைவில் விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது வெற்றியாளர்கள்
1. தஞ்சாவூரைச் சேர்ந்ச கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன்
2. திருத்தணியைச் சேர்ந் ஓதுவார் சுவாமிநாதன்
3. நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணன்
4. சேலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர்
5. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவத்சலம்
6. புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே. பழனிவேல்